இந்தியாவின் வழி தனிவழி ;இஸ்ரேலின் சூழல் வேறு..!
உலக நாடுகளை இஸ்ரேல் கையாள்வதற்கும், இந்தியா கையாள்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.;
ஜியோபாலிடிக்ஸில், போர் என்பது, எதிரிகளை உள்ளே புகுந்து, அடித்து துவம்சம் செய்வது மட்டுமல்ல என்பது சாணக்யன், அந்த காலத்திலேயே சொன்னது தான். சாம, தான, பேத, தண்டம் என வரிசைக்கிரமாக சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
சிலர் அது புரியாமல், இஸ்ரேலை பார், அடித்து ஆடுகிறார்கள், அப்படித்தான், பாரதமும் செய்ய வேண்டுமென எண்ணுகின்றனர். உலக அரசியலில், நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, இஸ்ரேலுக்கு, எந்த மேலை நாடுகளோ, சவுதி, எமிரேட்ஸ் போன்ற இஸ்லாமிய நாடுகளோ, என்ன செய்தாலும், நேரிடையாக எதிர்ப்பை தெரிவிக்கப் போவதில்லை. அதற்கு சில காரணங்களும் உண்டு.
ஒரிஜினல் கிருத்துவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள், மத்தியில், யூதர்களை, தங்கள் முன்னோர்கள் அழித்தது குறித்த, குற்ற உணர்வு எப்போதும் உள்ளது. எனவே அவர்கள் எப்போதும் இஸ்ரேலை மறைமுகமாக ஆதரிக்கின்றனர்.
தவிர யூதர்களின் தொழில்நுட்பம், அறிவை, இந்த உலகத்தின் 70-75% தொழில்கள் சார்ந்து உள்ளன. அதன் பேட்டன்டுகள் அவர்களிடம் உள்ளன. - அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உட்பட பெரும்பாலான நாடுகள், யூதர்களின் முதலீடு மற்றும் தொழிற்சாலைகளை நம்பி உள்ளன. அவர்களை எதிர்த்துக் கொள்ளும் அளவிற்கு, அரசியல் முடிவுகளை, இஸ்ரேலுக்கு எதிராக ஒருபோதும் எடுக்காது.
யூதர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் இஸ்ரேலை எந்த காரணமும் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நிதி, அரசியல் உதவிகளை முதலாவது கடமையாக கருதி செய்பவர்கள். இப்போது இதே நிலையை இந்தியர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்தியர்களில் 60% பேர் (இங்கு நான் குறிப்பிடுவது, படித்த நல்ல பதவிகள், வசதிகளுடன் உள்ளவர்கள்) அரசியலின் அடிப்படை கூட தெரியாது. என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலையில்லை. தான் தங்கள் குடும்பம், அதை தாண்டி வெளியே வருவதில்லை. எனவே இந்தியா, இஸ்ரேலைப் போல ஆக ஒரு போதும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.
2014க்கு பிறகு இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்தாலும், பெரிய அளவில் தாக்கம் இப்போது வரை இல்லை. பிப்ரவரி 2024ல் Interim Budgetல் வந்த, வருமான வரி பாலிசியை, ஜூனில், நடைமுறை படுத்திய போது, பெரும்பாலான அறிவு ஜீவிகளை பற்றி, தெரிந்து கொள்ள முடிந்தது.
சரி, இஸ்ரேல் எனும் சிறிய நாடு, தன்னுடைய மொத்த பொருளாதாரத்தையும் இழந்து, ஒரு சிறு நிலப்பகுதி காஜா பட்டியில் ஒரு வருடம் போராடியது, இன்னமும் ஹெஸ்புல்லா, ஹௌதி, ஈரானுடன் போராடுகிறது. அந்த மக்கள் எத்தனை பிரச்சினைகளுக்கு நடுவேயும் அரசின் பின்னால் நிற்கின்றனர்.
அதே நிலைமை பாரதத்தில் வந்தால் என்னாகும் என்று யோசியுங்கள். பாதிப்பேர் அரசை கவிழ்த்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். அது எந்த அரசாக (பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணி) இருந்தாலும்.
இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக குடும்பத்தை, நல்ல வேலை வசதிகளை விட்டு, உலகத்தின் எந்த மூலையிலும் உள்ள களத்தில் உயிர் துறக்க தயாராக உள்ளனர். இங்கே மோடியை கேள்வி கேட்கும் எந்த ஒரு இந்தியரும் தன் குடும்பத்தினரை போர் களத்திற்கு அனுப்புவார்கள் என்று சொன்னால், நீங்களே நம்ப மாட்டீர்கள். சாவதற்குத் தானே ராணுவத்தினருக்கு வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கிறோம் என்று பேசும் மனிதர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கின்றனர். இன்னமும் சொல்லப் போனால் ஒருபோதும் போர்களத்தை கண்டறியாதவர்கள் ராணுவத்தை கேள்வி கேட்கும் அற்புதமும் இந்த நாட்டில் மட்டுமே நடக்கும்.
இதே இஸ்ரேல் பிரசிடென்ட் ஈரான் மக்களுக்கு விடுத்த செய்தியை எத்தனை பேர் கவனித்தீர்கள். இதுவும் ஒரு போர்தானே. உள்நாட்டு கலவரத்தை தூண்டி விடுதல். ஈரானில் ஒரு பெரும் உள்நாட்டு கலவரம் விரைவில் உருவாகும், அன்று புரியும்.
அமெரிக்கா வல்லரசு நாடு, ரஷ்யாவுடன் நேரடியாக மோதுகிறதா என்ன? ஒரு கூத்தாடியை ஏத்திவிட்டு, இன்னொரு நாட்டை போராடவைத்து காசு பார்க்கிறது. எதிரியின் பலத்தையும் குறைக்கிறது, அதுவும் ஒரு வகை போர் தந்திரம் தானே?
சீனாவும் அமெரிக்காவும், இந்தியாவுடன் நேரடியாக மோதுகிறதா? அருகில் உள்ள நாடுகளை எரியவிட்டு இம்சை கொடுக்கவில்லையா? தொழில்நுட்பம், பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுக்க இங்குள்ள கைக்கூலிகளை தூண்டி விடவில்லையா? அதுவும் ஒருவித போர் தந்திரம் தானே?
அதெல்லாம் சரி, பாரதம் என்ன செய்கிறது, என்பவர்களுக்கு உலகில் என்ன நடக்கிறது என்பது ஒன்றுமே தெரியவில்லை என்றே உறுதியாக சொல்ல முடியும். எத்தனை நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பாரதத்தின் தலைமையை ஏற்க தயாராக உள்ளது என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கொரோனாவிற்கு பின்னர் உலகின் பல நாடுகள் வீழ்ந்து விட்ட நிலையில் மீறி வளரும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. ஆத்ம நிர்பர், மேக் இன் இந்தியா இவற்றின் மதிப்பெல்லாம் இன்னமும் 10-15 ஆண்டுகளுக்கு பிறகு புரியும். பங்களாதேஷில் ஷேக் ஹசீனா கொல்லப்படாமல் தப்பித்தது எப்படி என்று யோசித்தால் புரியும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நவம்பர் 01- 24ம் தேதிக்குள் பாகிஸ்தானில் ஒரு பிரளயம் வெடிக்க காத்துக் கொண்டுள்ளது. ஜியோபாலிடிக்ஸ் வல்லுனர்களைத் தேடி அவர்கள் கருத்துகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். முகமறியா நபர் திடீரென வந்ததும் காணாமல் போனதும் தற்செயலா? அதற்கு பின்னர் ஒரு அமைதி, வரக்கூடிய புயலுக்கு முன்னறிகுறி.
மாலத்தீவுகள், மியன்மர், நேபாளம், என எங்கே பாரதம் என்ன செய்கிறது என்பதை இந்திய அரசு வெளியில் சொல்லாது. அப்படியே சொன்னாலும் மக்களுக்கு புரியப்போவதில்லை.
உள்நாட்டில் மத அடிப்படைவாதம், நக்சலிசம், வாக்கு வேட்டைக்கான இலவச, சாதி மத திட்டங்களை வேரோடு அழிப்பதற்கான வேலைகள் முழுமூச்சாக நடந்து கொண்டுள்ளது. சாமமும் தானமும் பேதமும் இப்போது நடந்து முடியும் தருவாய். தண்டத்தை கையில் எடுக்கும் காலம் விரைவில். சங்கின் நாதம் திக்கெட்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அதனை புரிந்து கொள்ள படிப்பு மட்டும் போதாது. விரைவில் காலம் பதில் சொல்லும்.