ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில், மசூதி ஒன்றை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

Update: 2021-10-08 13:30 GMT

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மசூதி. 

ஆப்கானிஸ்தானில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, இரு மாதங்களுக்கு முன்பு தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பின்னர், அங்கு அரசியல் குழப்பங்களும், வன்முறைத் தாக்குதல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில்,  மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு பகுதியில் இருக்கும் ஷியா முஸ்லீம்களை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் அமைப்பின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு,  அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Tags:    

Similar News