ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அமீரகத்தில் அடைக்கலம்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்;
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். தலைநகர் காபூலை அவர்கள் நெருங்கிய நிலையில், தன் குடும்பத்தாருடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நாட்டில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளேன்' என, கனி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மனிதநேய அடிப்படையில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிபர் கனி கூறுகையில், "நான் அங்கு தங்கியிருந்தால், ஆப்கானிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆப்கானியர்களின் கண்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டிருப்பார்" என்று கானி பேஸ்புக் வீடியோவில் கூறினார்.