பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை அப்துல் காதர் கான் காலமானார்
இந்தியாவில் பிறந்த, பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை டாக்டர் அப்துல் காதர் கான் இன்று இஸ்லாமாபாத்தில் காலமானார்.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனக் கருதப்படும் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதர் கான், தனது 85 வயதில் இன்று காலை இஸ்லாமாபாத்தில் காலமானார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நுரையீரல் பிரச்சனையால் இஸ்லாமாபாத்தில் உள்ள கேஆர்எல் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் 1936ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.