300 ஆண்டு பழமையான நாளிதழ் நிறுத்தம்
உலகிலேயே மிகப் பழைமையான நாளிதழ் என்ற பெருமையைப் பெற்ற வியன்னாவைச் சேர்ந்த வியனர் செய்டங் என்ற நாளிதழ், வெள்ளிக்கிழமையுடன் வெளியீட்டை நிறுத்தி விட்டது.;
வியன்னர் செய்டங்
உலகில் டிஜிட்டல் மீடியாக்களின் ஆதிக்கம் தொடங்கிய போதே, அச்சு ஊடகங்கள் பலமிழக்க தொடங்கின. இருப்பினும் அச்சு ஊடகங்களுக்கு என இருந்த குறிப்பிட்ட வாசகர்களின் பலத்தால், பிரிண்டிங் மீடியாக்கள் சற்று தாக்குப்பிடித்தன.
கொரோனா பேரிடர் ஒட்டுமொத்தமாக அந்த வாசகர்களையும் சாய்த்து விட்டது. காரணம் கொரோனா காலத்தில் பல லட்சம் வாசகர்கள் செய்தித்தாள்கள் வழியாக கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வந்து விடும் என நினைத்து நாளிதழ்களை வாங்க மறுத்து விட்டனர். இந்த பேரிடரில் அடிவாங்காத நாளிதழ்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
இந்த இடைவெளியில் சமூக மீடியாக்கள் அசுரத்தனமாக வளர்ந்து விட்டன. அமெரிக்க அதிபருடனான இந்திய பிரதமரின் சந்திப்பினை நேரடியாக ஒளிபரப்பும் அளவுக்கு சமூக மீடியாக்கள் வளர்ந்து விட்டன. அதன் பின்னர் 24 மணி நேரம் கழித்து அந்த செய்தியை படத்துடன் பிரிண்ட் செய்து கொடுப்பதால் வாசகர்களுக்கு என பலன் இருக்கப்போகிறது.
சமூக மீடியாக்கள் அத்தனை செய்திகளையும் உடனுக்குடன் கொடுத்து விடுவதால், அச்சு ஊடகங்களின் விற்பனை தற்போது வரை அதிகரிக்கவில்லை. உள்ளூர் செய்திகளையும் உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்களும், முகநுால் குரூப்களும் வழங்கி விடுகின்றன. இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பமும் அதிகரித்து விட்டதால் ஒட்டுமொத்த பிரிண்டிங் மீடியாக்களும் பெரும் சரிவினை சந்தித்து விட்டன. இதனால் பிரிண்டிங் மீடியாக்களின் ஆதிக்கம் மட்டுமல்ல. வாழ்வியலும் முடிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே வாசகர்கள் பலர் விமர்சிக்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் பல மீடியாக்கள் மூடப்பட்டு வருகின்றன.
வியன்னா அரசுக்குச் சொந்தமான வியன்னர் செய்டங் என்ற நாளிதழ் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்து, நாளிதழ் வெளியீட்டையே நிறுத்தி விட்டுள்ளது.
கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த இந்த நிறுவனம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது நாளிதழின் முகப்புப் பக்கத்தில், 1,16,840 நாள்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என தனது இதழுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த பிரிண்டிங் மீடியாக்களையும் கவலை அடைய செய்துள்ளது.