ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 35 வயது நிரம்பிய பெண் தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகு, ரத்தம் உறைதல் அதிகரித்து, அதன் காரணமாக நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வருகிறார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தம் கடுமையாக உறைந்து அதன் விளைவாக அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அஸ்ட்ராஸெனகா மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த இரண்டு பெண்களும் தடுப்பூசியால்தான் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சுகாதார பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.