ஜெர்மனி சிறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்த புகைப்படத்தால் அந்நாட்டு அரசுக்கு 43,000 பவுண்டுகள் செலவு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் பெர்லினுக்கு அருகிலுள்ள சிறையில் புதிதாக பணிக்கு ஒருவர் சேர்ந்தார் . இந்நிலையில் தனக்கு வேலை கிடைத்துள்ளதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக, கைதிகளின் அறைகளின் 600 சாவிகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வெளியானதுமே, அதிகாரிகள் உடனடியாக சிறையிலுள்ள 600 பூட்டுகளையும் மற்றிவிட்டார்கள். அத்துடன் பழைய சாவிகளும் அழிக்கப்பட்டுவிட்டன.ஆனால், அதற்காக 50,000 யூரோக்கள் (43,000 பவுண்டுகள்) செலவானது. அந்த சிறை பணியாளர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செலவான 50,000 யூரோக்கள் அவரிடமிருந்தே வசூலிக்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.