Weather news in tamil-இன்னும் மூணு நாளைக்கு மழை இருக்குங்க..!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.;
Weather news in tamil
இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Weather news in tamil
15ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16ம் தேதி (சனிக்கிழமை) அன்றும் மற்றும் 17ம் தேதி ஞாயிறு அன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18ம் தேதி திங்கட்கிழமை மற்றும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Weather news in tamil
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (சென்டிமீட்டரில்):
வானூர் (விழுப்புரம்) 9, BASL முகையூர் (விழுப்புரம்) 7, BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 5, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), கீழ்அணைக்கட்டு (தஞ்சாவூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-2 KEDAR (விழுப்புரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்),
புதுச்சேரி தலா 4, ஜெயம்கொண்டம் (அரியலூர்), அண்ணாமலைநகர் (கடலூர்), குப்பநத்தம் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), வடகுத்து (கடலூர்), வனமாதேவி (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), DSCL கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),
தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பார்வூட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), திருவண்ணாமலை, மரக்காணம் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சிதம்பரம் AWS (கடலூர்) தலா 3, அரியலூர், ஆட்சியர் அலுவலகம் கடலூர், கொத்தவாச்சேரி (கடலூர்), கடலூர், பண்ருட்டி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), எஸ்ஆர்சிகுடிதாங்கி (கடலூர்), அரூர் (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), SCS மில்பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),
Weather news in tamil
கேஆர்பிஅணை (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), சீர்காழி (மயிலாடுதுறை), நாமக்கல், கூடலூர்பஜார் (நீலகிரி), மேல்கூடலூர் (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 2,
புவனகிரி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), கே.எம்.கோயில் (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), லக்கூர் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தொழுதூர் (கடலூர்), வேப்பூர் (கடலூர்), அம்மாபேட்டை (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), பெருந்துறை (ஈரோடு), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி, KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 கச்சிராயோபாலயம் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 மூர்பாளையம் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி, மணல்மேடு (மயிலாடுதுறை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை),
Weather news in tamil
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், புதுச்சத்திரம் (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), எறையூர் (பெரம்பலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஆனைமடுவுஅணை (சேலம்), எடப்பாடி (சேலம்), கரியகோவில் அணை (சேலம்), விண்ட்வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), SCS மில் திருவெண்ணெய் நல்லூர்(விழுப்புரம்), விழுப்புரம், தர்மபுரி PTO, வம்பன் KVK AWS (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று, புதன் கிழமை மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14 மற்றும் 15தேதிகளில்( வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை)
இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Weather news in tamil
16ம் தேதி(சனிக்கிழமை)
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17ம் தேதி(ஞாயிறு)
இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.