சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 17, 18 தேதிகளில், சென்னை, வட தமிழகம் மற்றும் கடலோர பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-15 09:30 GMT

இது தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில்,  செய்தியாளர்களிடம் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: 

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது,  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வருகிற நவம்பர் 18ஆம் தேதி, தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில்,  நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

தென்கிழக்கு அரபிக் கடலுக்கும், தென்மேற்கு வங்கக் கடலுக்கும் இடையில், வடக்கு கேரளா வடதமிழகம் ஒட்டியுள்ள பகுதியில் காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூர் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வரும் 15, 16 தேதிகளில் தமிழகம் புதுவையில் பொதுவாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஈரோடு நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

நவம்பர் 17, 18 தேதிகளில்,  வங்கக்கடலில் இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும். கனமழை பொறுத்தவரை வடக்கு மற்றும் வட தமிழக கடற்கரை மற்றும் உள் மாவட்டங்களில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17 18 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News