தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 09:00 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும், வெப்பச்சலனம் காரணமாக,  6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, தேனி, திண்டுக்கல், குமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு அரபிக் கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News