அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் இடங்கள், வானிலை மையம் அறிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் இடங்கள் குறித்து வானிநிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-30 10:17 GMT

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு

தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பசலனத்தின் காரணமாக

01.07.2021: தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

.02.07.2021, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள், வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.07.2021:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

பரமக்குடி (ராமநாதபுரம்) 9, வேடசந்தூர் (திண்டுக்கல்) 8, கரூர் . பரமத்தி (கரூர்) 6, பரமத்திவேலூர் (நாமக்கல்) 5, சின்னக்கல்லார் (கோவை), திருச்சுழி (விருதுநகர்) தலா 3, உடையளிப்பட்டி (புதுக்கோட்டை) 2, குன்னூர் (நீலகிரி), தேவகோட்டை (சிவகங்கை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆண்டிபட்டி (தேனி, திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

அரபிக்கடல் பகுதிகள்:

30.06.2021 முதல் 04.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News