மாண்டஸ் புயல்: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-06 05:35 GMT

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறி, சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதையடுத்து தமிழகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை.

இந்நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 8ந் தேதி கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக,சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது. 

Tags:    

Similar News