வயநாட்டில் பெய்ததை போல் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெருமழையை விடவும் அதிக பெரு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update: 2024-08-14 04:08 GMT

கோப்புப்படம் 

சமீபத்தில் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்கள் நிலச்சரிவிற்குள் சிக்கின. பல நூறு பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட வயநாட்டில் 48 மணி நேரத்தில் 590 மி.மீ., மழை பெய்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர். அப்பகுதிகளில் மழையை கணிக்க துல்லியமான மழைமானிகள் இல்லை. இதனால் பெய்த மழையளவு பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

தவிர தற்போது இயற்கை மேகவெடிப்பு போன்ற பெரும் சிக்கல்களை கொடுத்து வருகிறது. மழைமானி இல்லாத இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டால் பெய்த மழையின் அளவினை கணிக்க முடியாது. இதனால் வயநாட்டில் கேரள அரசு தடுமாறியது. இந்த சிக்கல் தற்போது தமிழகத்திற்கும், குறிப்பாக தென் மாநிலங்களுக்கும் வர உள்ளது.

கேரளாவிலும், தமிழகத்திலும் அடுத்து வரும் ஓரிரு நாட்கள் மிக, மிக அதிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மழையானது மத்திய கேரளம், தென் கேரளம் மற்றும் தென் தமிழகத்தில் நிலை கொள்ளும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது முழு கேரளமும், தென் தமிழகம் மட்டுமில்லாது பரவலாகவே முழு தமிழகமும் இந்த மழையில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தென் தமிழகத்தை விட ஏனைய தமிழகத்தில் மழை அளவு மாறுபடும்.

தென் தமிழகத்தில் கேரளாவுக்கு இணையான பெருமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழக மலைப்பகுதிகளான நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் முதலான பகுதிகளில் மழை அளவு கூடுதலாக இருக்கும். ஆகஸ்ட் 14 இன்று மற்றும் ஆகஸ்ட் 15 ம் தேதி நாளை மழை தனது ஆட்டத்தை துவங்கி விடும்.

தொடர்ச்சியாக எத்தனை நாட்கள் பெய்யும் என்பது தெரியவில்லை. முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழக மக்கள் இந்த முறை அவர்களுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். தென் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பயணம் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள் தேதிகளை ஒத்தி போடுங்கள்.

இந்த பெரு மழைக்கு நியூட்டனின் தியரியை மேற்கோள் காட்டி உள்ளனர். ஜனவரி முதல் மே வரை கடும் வெப்பம் நிலவியது. அதனை ஈடு செய்ய செப்டம்பர், அக்டோபர், நவம்பர் வரையிலுமே மழை அதிகமாக பெய்யும் என கணிக்கிறார்கள். மழையை நாம் தடுக்க முடியாது. ஆனால் சேதத்தை நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிர்க்க அல்லது குறைக்க முடியும்.

இன்று முதல் 15க்குள் இந்த மழை துவங்க இருப்பதால் மக்கள் கவனமாக இருக்கவும். எவ்வளவு நாள் மழை நீடிக்கும் என்பது சொல்லப்படவில்லை.

Tags:    

Similar News