தென் கிழக்கு வங்க கடலில் உருவாக போகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2023-11-12 12:10 GMT

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துஇருக்கிறது. இது வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் நிகழக்கூடிய முதல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14 ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும்.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசனது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெபவெப்ப நிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News