கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ, வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
திருவள்ளூர் முதல் கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.;
வானிலை ஆய்வு மையம் தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் கூறியதாவது: அடுத்த மூன்று நாட்களில் (டிசம்பர் 3, 4 மற்றும் 5) வடதமிழக கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
இன்று திருவள்ளூரில் துவங்கி கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கிளல் கனமழை பெய்யக் கூடும்.
4ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
இன்று திருவள்ளூர் முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ். வேகத்தில் வீசும்.
நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கடற்கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். விழுப்பும், புதுவையில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடம்.
தமிழகம், புதுவை, காரைக்காலில் அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போது வரை 34 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 36 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். வழக்கமான மழையை விட 7 சதவீதம் குறைவு.
சென்னையில் 62 செ.மீ.. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 67 செ.மீ. பெய்திருக்க வேண்டும். 7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
இன்று மற்றும் நாளையும் தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழக கடலோரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவித்தார்