மாயமான மனைவியை தேடும் கணவன்
குமாரபாளையத்தில், 2 நாள் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்த நபர்;
மாயமான மனைவியை தேடும் கணவன்
குமாரபாளையம் நாராயண நகரைச் சேர்ந்த 33 வயதான வடிவேல் என்பவரது மனைவி பூமிகா (வயது 25), கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தம்பதிக்குள் சமீபத்தில் சில தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்தச் சண்டையின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற பூமிகா, பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் விசாரித்தும் கிடைக்காத நிலையில், மிகுந்த கவலையில் இருந்த வடிவேல், தனது மனைவி காணாமல் போனதைத் தொடர்பாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பூமிகாவை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட பகுதியில் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.