வேலூர் நகரில் தார் சாலை புதுப்பிப்பு,1.63 கோடி மதிப்பில் பூமிபூஜை

1.63 கோடியில் வெள்ளூர் சாலையை புதுப்பிக்கும் திட்டம்;

Update: 2025-04-26 06:50 GMT

ப.வேளூரில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை

ப.வேளூர்: ப.வேளூர் டவுன் பஞ்சாயத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில், 16 மற்றும் 17வது வார்டுகளில் தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று தமிழக நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பிப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சுகந்தி, ராணி ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர். நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், ப.வேளூர் திமுக நகர துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News