சத்துணவு ஊழியர்கள் உரிமைப் போராட்டம்

நாமக்கலில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;

Update: 2025-05-15 09:10 GMT

சத்துணவு ஊழியர்கள் உரிமைப் போராட்டம் 

நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைவர் கோமதி தலைமை வகித்தார். அவருடன் இணைச் செயலாளர் சுமதி, மாநில துணைத் தலைவர்கள் மஞ்சுளா, பெரியசாமி, மாவட்ட செயலாளர் தங்கராஜூ மற்றும் பொருளாளர் சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில், மே 24, 25 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டியது குறித்து வலியுறுத்தப்பட்டது. முக்கியமாக சத்துணவு ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்துடன் பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பாலின பாகுபாடின்றி பணியளிப்பு, காலி பணியிடங்களை நிரப்பும் முன் பணிமாற்றம் வழங்குதல், ஊதிய ஒட்டுமொத்த தொகையை உயர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்டத் தலைவர் தனசேகரன், செயலாளர் முருகேசன், கால்நடை ஆய்வாளர் சங்க மாநில துணை தலைவர் இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News