மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான போராட்டம் – மூவர் கைது

குமாரபாளையம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-04-22 05:10 GMT

மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான போராட்டம் – மூவர் கைது

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், இன்று காலை 10:00 மணிக்கு சென்னை கோட்டையை முற்றுகையிடும் வகையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்க குமாரபாளையம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் மா.கம்யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள முருகேசன் தலைமையில் பலர், பள்ளிப்பாளையம் சாலை அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் நேற்று இரவு பயணத்திற்குத் தயாராக இருந்தனர். இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் போலீசார் அங்கு சென்று அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது, 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். பரபரப்பான சூழ்நிலையில், போலீசார் சமரசமாக பேசி, முருகேசன், சங்க உறுப்பினர்கள் கனகராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களை பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News