நீதிமன்றத்தில் ஆஜராகாத மூவர் – தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான மூன்று நபர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்;

Update: 2025-05-21 03:50 GMT

நீதிமன்றத்தில் ஆஜராகாத மூவர் – தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு:

திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான மூன்று நபர்கள் தற்போது தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி வெளியிட்ட தகவலில் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (25), நாய்க்கன்புதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (27) மற்றும் மாரியப்பன் (23) ஆகிய மூவரும், திருட்டு சம்பந்தமான வழக்கில் தொடர்புடையவர்கள்.

நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம், இவர்கள் மூவரையும் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்து, ஜூன் 23க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News