ஆர்.என்.ஆக்ஸ்போர்டு CBSE பள்ளியில் பரிசளிப்பு விழா கொண்டாட்டம்

நாமக்கலில், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது;

Update: 2025-05-06 09:30 GMT

ஆர்.என்.ஆக்ஸ்போர்டு CBSE பள்ளியில் பரிசளிப்பு விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தின் ப.வேலூர் அருகே அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு CBSE பள்ளியில் 2024-25 கல்வியாண்டுக்கான பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த ஆண்டில் சராசரி மதிப்பெண், NEET-JEE பயிற்சி தேர்வுகள் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2018-இல் தொடங்கப்பட்ட இந்த பள்ளி, CBSE (அமைப்பு எண் 1931007) அங்கீகாரம் பெற்ற Co-ed பள்ளி ஆகும். இங்கு 45 ஆசிரியர்கள் கூடிய குழுவுடன் Nursery முதல் 10-ம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில-தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் 35 மாணவர்கள் பதக்கங்களை வென்றதன் நினைவாக, கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கல்வி நிறுவன தலைவர் சண்முகம் தலைமையிலான விழாவில், டிஎஸ்பி சங்கீதா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு “உயர்ந்த கனவுகளுடன் உழைத்தால் மட்டுமே வெற்றி எட்ட முடியும்” என உறுதிப்படுத்தினர்.

Tags:    

Similar News