நாமக்கல் புதுப்பட்டியில் தி மாடர்ன் அகாடமி CBSE பள்ளி திறப்பு விழா

நாமக்கலில், புதிதாக திறக்கப்பட்ட தி மாடர்ன் அகாடமி பள்ளி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது;

Update: 2025-05-03 06:10 GMT

நாமக்கல் புதுப்பட்டியில் தி மாடர்ன் அகாடமி CBSE பள்ளி திறப்பு விழா

நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள நா. புதுப்பட்டியில், புதிதாக திறக்கப்பட்ட தி மாடர்ன் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியின் துவக்க விழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதல்நிகழ்வாக, பள்ளித் தாளாளர் குமரேசன் ரிப்பன் வெட்டி பள்ளியின் துவக்கத்தை அறிவித்தார். அதன் பின்னர், பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நியூக்லி ஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் பாட்ஷா, பள்ளியின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்காலக் கல்வித்திட்டங்கள் குறித்து பேசினார். 'நீட்', ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நியூக்லி ஐ பவுண்டேஷனின் மனிதவள மேலாளர் ரம்ஜியா விரிவாக விளக்கினார்.

விழாவை மேலும் சிறப்பாக்க, பெற்றோருக்காக 10 அட்மிஷன் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளின் சேர்க்கை எளிதாக மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனை பெற்றோர் மகிழ்ச்சியுடன் ஏற்று, தங்கள் குழந்தைகளை சேர்க்கை செய்தனர். அதோடு, கேம் ஸ்டால்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வு, புதிய கல்வி நிறுவனத்தின் உயர்ந்த இலக்கை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்தது.

Tags:    

Similar News