அரசு பள்ளி மாணவர்கள் அபாகஸ் வகுப்பில் சாதனை
பள்ளிப்பாளையத்தில், அபாகஸ் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது;
அரசு பள்ளி மாணவர்கள் அபாகஸ் வகுப்பில் சாதனை
பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், அபாகஸ் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் வெங்கடாசலம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்க உறுப்பினர்களான வேலு மற்றும் பழனியப்பன், தலைமை ஆசிரியர் மெஜலா, நல்லாசிரியர் விருது பெற்ற சொர்ணதீபம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அக்ஷயாஸ்ரீ என்ற சிறுமிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக, பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்கம் நிதி உதவி வழங்கியது.