போலீஸ் பாதுகாப்பில் மசூதிகள்- அச்சத்தில் மக்கள்

ஜம்மு-காஷ்மீரில், நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் முன்னெச்சரிக்கையாக மசூதிகளில் போலீசார் பாதுகாப்பு;

Update: 2025-04-24 04:00 GMT

போலீஸ் பாதுகாப்பில் மசூதிகள்- அச்சத்தில் மக்கள்

பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு மிகுந்து உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளிப்பாளையத்தில் உள்ள அனைத்து முக்கியமான மசூதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகமாக செல்வது போன்ற இடங்களில் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் உள்ளனர். அவ்வப்பபோது வாகனங்கள் நிறுத்தி சோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது. முக்கிய சாலைகள், வழித்தடங்கள் மற்றும் ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை போலீஸ்  உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News