குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை
குமாரபாளையத்தில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்ற மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை
குமாரபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த முக்கிய தகவலையடுத்து, போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். இன்ஸ்பெக்டர் தகுமாரபாளையத்தில்வமணி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு, காவிரி படித்துறை, காந்தி தெரு மற்றும் காந்தி நகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். அந்த நேரத்தில், சந்தேகத்துக்கிடமான நிலையில் நடமாடிக்கொண்டிருந்த மூவரை போலீசார் கவனித்தனர். விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தம்மண்ணன் வீதியைச் சேர்ந்த ஐயப்பன் (38), உடையார்பேட்டையைச் சேர்ந்த சிவா (23), மற்றும் மேற்கு காலனியைச் சேர்ந்த வசந்தகுமார் (23) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கஞ்சா விற்பனைக்கான பின்னணித் தளங்கள், தொடர்புடையவர்கள் ஆகியோரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.