ரவுடிகளுக்கு போலீஸ் கண்காணிப்பு வலை வீச்சு
வெப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, ரவுடிகள் கண்காணிப்பை போலீஸ்சார் தீவிரப்படுத்தியுள்ளனர்;
ரவுடிகளுக்கு போலீஸ் கண்காணிப்பு வலை வீச்சு
பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல்துறையினர் ரவுடிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போதைய தரவுகளின்படி, இந்தப் பகுதியில் 10 பேர் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் எங்கு வசிக்கின்றனர், எந்த வேலைக்குச் செல்கின்றனர், அவர்கள் உள்ளூரில்தான் அல்லது வெளியூரில் இருக்கிறார்கள் என்பதோடு, அவர்களது அன்றாட நடவடிக்கைகள், ஒழுங்குப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையா, இல்லை சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதையும் போலீசார் மிக கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சட்ட ஒழுங்கை மீறுவதோடு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் துல்லியமாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக நலனுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.