போதையில் பேனரை கிழித்த இளைஞர் கைது

அம்பேத்கர் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் விழா பேனரை, போதையில் கிழித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-04-16 04:50 GMT

போதையில் பேனரை கிழித்த இளைஞர் கைது

நாமகிரிப்பேட்டை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நாமகிரிப்பேட்டை யூனியன் பகுதியில் உள்ள மங்களபுரம் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள் சார்பில் அம்பேத்கரின் படத்துடன் பிறந்தநாள் விழா பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் வந்த பொதுமக்கள், பேனர் கிழிக்கப்பட்டு கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதை கண்டித்த பொதுமக்கள், சம்பவத்துக்கு பொறுப்பானவரை உடனடியாக கைது செய்யக்கோரி, 50க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சில நேரத்திற்கு பாதிக்கப்பட்டது.

மீண்டும் அமைதி நிலை திரும்பிய பிறகு, மங்களபுரம் போலீசார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அந்தக் காணொளிகளில், அதே பகுதியில் வசிக்கும் குகன் (வயது 25) என்பவர், போதையில் பேனரை கிழித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News