பெண்ணிடம் நகை பறிப்பு – இருவர் கைது

டூவீலரில் சென்ற பெண்ணிடம், ஐந்து பவுன் நகையை பறித்த இருவரை, போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்;

Update: 2025-04-21 10:30 GMT

சேந்தமங்கலத்தில் நகை பறிப்பு – இருவர் கைது

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டம்பட்டி மேட்டில், டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொண்டமநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த மலர்கொடி (வயது 55), கடந்த 11ஆம் தேதி நாமக்கலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த இரண்டு பேர், அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் நகையை மின்னல் வேகத்தில் பறித்து தப்பினர்.

மலர்கொடியின் புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளிகள் சென்ற வாகனத்தின் பதிவு எண் மற்றும் அவர்களிடம் இருந்த மொபைல் எண்கள் மூலம் அவர்கள் சேலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த யுவராஜ் (25) மற்றும் ரஞ்சித்குமார் (22) என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஐந்து பவுன் நகை பூரணமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News