சட்டவிரோதமாக மது விற்றதில் ஒருவர் கைது
பள்ளிப்பாளையம் அருகே, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்றவரை,போலீசார் கைது செய்தனர்;
சட்டவிரோத மது விற்றதில் ஒருவர் கைது
பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை சுற்றுவட்டார பகுதியில், நுாற்பாலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை குறிவைத்து, இரவு மற்றும் பகலிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியிலுள்ள குடிமக்களின் நடமாட்டம் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகரித்து காணப்படுவதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளும் உருவாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சதீஸ் (வயது 35) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால், அந்த பகுதியில் மது விற்பனை கட்டுப்படக்கூடும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.