சாலை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை
மோகனூர் சாலையில் பாதாள சாக்கடை பணிக்கு, தோண்டப்பட்ட சாலையினை சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்;
சாலை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை
நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள முல்லை நகர் பகுதியில், முக்கியமான அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையென்பதால், இயல்பாகவே போக்குவரத்து பெரிதும் காணப்படுகிறது. இந்த சாலை, பொன்விழா நகர், அழகு நகர் மற்றும் ரயில்வே மேம்பாலம் வழியாக திருச்சி சாலையை இணைக்கும் முக்கிய மார்க்கமாகவும் விளங்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு, இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் பாகமாக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன. பணி முடிந்த பின் அந்த பள்ளம் மூடப்பட்டாலும், சாலை முறையாக சீரமைக்கப்படாததால், ஜல்லிக்கற்கள் அவ்வப்பபோது பெயர்ந்து வாகன ஓட்டிகளை பெரிதும் தொந்தரவு செய்யும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.