சிக்கன் விற்பனையில் சிக்கல் - நாட்டுக்கோழி விலை ரூ.700 உயர்வு

ஒரே வாரத்தில் ரூ.700 உயர்வை கண்டதும், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்;

Update: 2025-05-05 09:20 GMT

சிக்கன் விற்பனையில் சிக்கல் - நாட்டுக்கோழி விலை ரூ.700 உயர்வு

நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் அமைந்துள்ள சுல்தான்பேட்டை வாரச்சந்தை, ஞாயிறுதோறும் மக்கள் கூட்டத்துடன் கூடி நடை பெறும் முக்கியமான சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தையில் பரமத்தி, ப.வேலூர், மோகனூர், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிறந்த தரமான நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஞாயிறு விடுமுறை நாளாக இருப்பதால், அந்த சந்தையில் மட்டன் மற்றும் சிக்கன் பொருட்கள் பெரும்பான்மையாக விற்பனையாகும். அதில் நாட்டுக்கோழி விற்பனைக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு.

அசைவ உணவு பிரியர்களால் அதிக விருப்பத்துடன் தேடப்படும் நாட்டுக்கோழிக்கான விலை, தற்போது வியாபாரிகளை மகிழ்விக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் உயர்ந்து விட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.600-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது, ஒரு கிலோ ரூ.700-க்கு உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் ரூ.100 உயர்வை கண்டதும், அசைவ உணவுக்கு அடிமையானவர்களும், குடும்பங்களுக்கும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. கோடைகால கோட்டைக்கு விற்பனை அதிகரித்ததும், விலையுயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் "நாட்டுக்கோழி சாப்பிட வேண்டுமா?" என மனம் வெறுப்புடன் திரும்புகிற நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்களின் கணக்கீட்டில் சந்தை சூழ்நிலை காரணமாக இன்னும் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News