மர்ம கொள்ளையர்களால் தூக்கம் தொலைந்த பகுதி

பள்ளிப்பாளையம் அருகே, இரவில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி மூவர் பொருட்களை திருடி சென்றதால் மக்கள் அச்சம்;

Update: 2025-04-22 04:00 GMT

மர்ம கொள்ளையர்களால் தூக்கம் தொலைந்த பகுதி

பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரஹாரம், தில்லை நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சமீபமாக மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து, மக்கள் துாக்கமே இழந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரவில், டிப்டாப் என அழைக்கப்படும் வாலிபர் ஒருவர், ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே புகுந்து, சில பொருட்களை திருடி தப்பி செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதேபோல், தாஜ்நகர் அருகே ஸ்ரீகார்டன் பகுதியில், ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர், வீடுகளை நோட்டமிட்டு, கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து சுவர் ஏறி தப்பிச் சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை பெற்று, அப்பகுதி மக்கள் பள்ளிப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ச்சியான இந்த மர்ம சம்பவங்கள், அப்பகுதியை அச்சத்தில் ஆழ்த்தி, மக்கள் இரவுகளில் தூங்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர்.

Tags:    

Similar News