முருங்கை விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை
வெண்ணந்தூர் பகுதியில் முருங்கை விலை கடுமையாக வீழ்ச்சி,விலை 400 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு;
முருங்கை விலை வீழ்ச்சி
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நடுப்பட்டி, மின்னக்கல், நெ.3.கொமராபாளையம், பொன்பரப்பிப்பட்டி, தொட்டியவலசு, தேங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் முருங்கை விவசாயம் பெரும் அளவில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
எனினும், சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்ததால் விலை கணிசமாக சரிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ முருங்கை வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இந்த விலை வீழ்ச்சியால் முருங்கை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.