ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் தயார்

சேந்தமங்கலம் அருகே, வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்;

Update: 2025-04-17 05:40 GMT

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் தயார்

சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டியில், ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, கடந்த 20 நாட்களாகவே மைதான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாடிவாசல், காளைகள் ஓடிச் சென்று முடியும் பகுதி, பார்வையாளர்கள் பார்ப்பதற்கான இடம் மற்றும் பேரிகார்டு அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. தற்போது வரை இந்தப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மைதானத்தின் முன் தயார்நிலையை நாமக்கல் மாவட்ட ஆர்.டி.ஓ. சாந்தி தலைமையில் போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த நேரத்தில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு, ஆர்.ஐ. பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News