தொலைபேசியில் விவசாய ஆலோசனை – மாணவியர் விழிப்புணர்வு முகாம்

விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை, கிசான் கால் சென்டர் வழங்கி வருகின்றது;

Update: 2025-04-21 09:10 GMT

தொலைபேசியில் விவசாய ஆலோசனை – மாணவியர் விழிப்புணர்வு முகாம்

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் இயங்கும் தனியார் வேளாண் கல்லூரியின் மாணவியர், கிராமப்புற அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கான பயனுள்ள தகவல்களை பகிரும் முகாம்கள் நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக, நேற்று கிசான் கால் சென்டர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கால் சென்டர், 2004 ஆம் ஆண்டு வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த சேவையின் மூலம், விவசாயிகள் தங்கள் விவசாயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை பெற்று தீர்வு காணலாம். விதைப்பு, அறுவடை, உரம் இடுதல் போன்ற விவசாய பணிகளில் உதவும் முக்கியமான தகவல்களை இந்த கால் சென்டர் வழங்கி வருகின்றது என மாணவியர் விவரித்தனர்.

Tags:    

Similar News