அரசு மானியத்தில் பண்ணை வளர்ச்சி – வருமானம் இரட்டிப்பு வாய்ப்பு

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்காக, ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது;

Update: 2025-05-13 09:10 GMT

அரசு மானியத்தில் பண்ணை வளர்ச்சி – வருமானம் இரட்டிப்பு வாய்ப்பு

பரமத்திவேலூர்: கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்காக, தற்போதைய ஆண்டுக்கான மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி யோசனை மூலம் முக்கிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த தகவலை, கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, சோளம் போன்ற மானாவாரி பயிர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்கள் மட்டுமல்லாமல், கறவை மாடு, எருமை, ஆடு, தேனீ வளர்ப்பு பெட்டிகள், மண்புழு உர உற்பத்தி படுக்கைகள், பழக்கன்றுகள் என பல்வேறு இணைபிடி தொழில்களுக்கான ஆதரவும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் இந்த வகையான ஒருங்கிணைந்த வேளாண் சாகுபடிகளை மேற்கொள்ள முடியும்.

இதற்காக, 15 பொது விவசாயிகளுக்கும், 5 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், தலா ₹30,000 வரையிலான உதவித் தொகை 50% மானியத்தில் வழங்கப்படும். இது, விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் சிறந்த வாய்ப்பாகும்.

Tags:    

Similar News