நாமக்கலில், தேசிய திருநங்கைகள் தினவிழா

நாமக்கலில், ஏப்ரல் 15ல் தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் திருநங்கைகள் கொண்டாடினர்;

Update: 2025-04-16 10:10 GMT

தேசிய திருநங்கைகள் தினவிழா

ஏப்ரல் 15ல் தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கலில் இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம் சார்பில் விழாவாக கொண்டாடப்பட்டது. இதன்படி, நேற்று நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சிம்ரன் தலைமையிலிலும், செயலாளர் அருணா, பொருளாளர் ஆர்த்தி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனீஷா, காருண்யா ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கு வண்ணம் சேர்த்தனர். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, திருநங்கைகள் பொதுமக்களுடன் கேக் வெட்டி பகிர்ந்து கொண்டதால், விழாவில் ஒரு சமூக ஒற்றுமை உணர்வு அதிகரித்ததோடு, அவர்களது மனித உரிமை, மரியாதை மற்றும் சமூக இடமளிப்புக்கான குரலாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்த நிகழ்ச்சி திருநங்கைகள் சமூகத்தின் தங்களது உரிமைகளை கொண்டாடும் ஒரு முக்கிய தருணமாக இருந்தது.

Tags:    

Similar News