பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுவது? நாமக்கலில் இன்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கை, இன்று 5 முக்கிய இடங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.;

Update: 2025-05-15 05:20 GMT

பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுவது? நாமக்கலில் இன்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

பருவமழை காலத்தில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கையாக, நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாலை 5 முக்கிய இடங்களில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி  (ஒத்திகை) நிகழ்ச்சியாகும் என்பதால், பொதுமக்கள் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில், மாவட்ட நிர்வாகம், துணை கலெக்டர்கள் தலைமையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி நடைபெறும் என்பதை கையாள்வது, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்துவது ஆகியவை முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் இடங்கள்: குமாரபாளையம் தாலுகா – பவானி பழைய பாலம், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு, ஜனதா நகர்; திருச்செங்கேடு தாலுகா – பட்லூர்; ப.வேலூர் தாலுகா – கொத்தமங்கலம்; மோகனூர் தாலுகா – ஒருவந்தூர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை, நீர்வளம், தீயணைப்பு மற்றும் மீட்பு படை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் கிராமத்துக்கான முதல்நிலை தகவலாளர்கள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News