ஸ்ரீ வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு புதிய வெள்ளிக்கவசம்-பக்தர்கள் பரவசம்
நாமக்கலில், எட்டு கிலோ வெள்ளிக்கவசம், ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது;
ஸ்ரீ வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு புதிய வெள்ளிக்கவசம்
நாமக்கல் நரசிம்மர் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வியாசராஜர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், பக்தர்கள் பக்தி மற்றும் நம்பிக்கையுடன் தரிசனம் செய்யும் புனிதத் தலம். நரசிம்மர் கோவிலுக்குச் செல்வோர், வழியில் உள்ள வியாசராஜர் ஆஞ்சநேயரையும் வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், திருச்சி பகுதியை சேர்ந்த ஒரு பக்தரின் குடும்பத்தினர், சுவாமிக்கான புதிய வெள்ளிக்கவசத்தை கோவிலுக்கு வழங்கினர். தஞ்சாவூரில் தயாரிக்கப்பட்ட இந்த வெள்ளிக்கவசம் எட்டு கிலோ எடையுடன், ரூ.11 லட்சம் மதிப்புடையதாகும். நேற்று காலை, கோவில் நிர்வாகத்திடம் இந்த வெள்ளிக்கவசம் வழங்கப்பட்டதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், புதிய வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்.