ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை
பள்ளிப்பாளையத்தில், ஐஸ்கிரீம், ஐஸ்கட்டி தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர்;
ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை
பள்ளிப்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ்கட்டி தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது, ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் சுகாதார நெறிமுறைகளை கடைபிடித்து தயாரிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு கட்டாயமாக மருத்துவ சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். குடியிருப்பு பகுதிகளில் ஐஸ் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயமாகும் எனவும், அதுபற்றிய அறிவுறுத்தல் ஐஸ் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ஐஸ்கிரீம் வகைகள் -18 டிகிரி செல்சியஸ் அளவிலான குளிர் பெட்டிகளில் சேமிக்கப்பட வேண்டும் என்பதும், கலப்புப் பொருட்கள் கலந்ததாக கண்டறியப்படும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த சோதனைகள் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டவை என்றும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.