மருந்துகள் இருந்தும் விற்பனை இல்லை – நாமக்கல் மருந்தகம் தடுமாற்றம்
தொழில் முனைவோர்கள், வருமானம் குறைவதனால் முதல்வர் மருந்தகத்தை திரும்ப ஒப்படைப்பதாக மனு அளித்தனர்;
மருந்துகள் இருந்தும் விற்பனை இல்லை – நாமக்கல் மருந்தகம் தடுமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சில முதல்வர் மருந்தகங்கள், வருமானக் குறைவால் இயல்பான முறையில் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. இதனால், தொழில் முனைவோர்களான தினகரன், தமிழரசன் மற்றும் தினேஷ் ஆகியோர், தாங்கள் நடத்திவந்த மருந்தகத்தை திரும்ப ஒப்படைக்க விருப்பம் தெரிவித்து, கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் இந்திராவிடம் மனு அளித்தனர். இரண்டு மாதங்களில் வெறும் ரூ.14,903 மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், செலவுகள் அதிகமுள்ளதால் நஷ்டத்தில் செயல்பட முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து இணைப்பதிவாளர் அருளரசு பதிலளிக்கையில், ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டதுடன், 206 வகையான மருந்துகள் தற்போது விற்பனைக்குள்ளாக உள்ளன என்றும், ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் கடையை திரும்ப ஒப்படைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.