வெண்ணந்தூரில் இருளப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
இருளப்பசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன், தீர்த்தக்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர்;
வெண்ணந்தூரில் இருளப்பசாமி கோவிலில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி கோவிலில், சித்திரை மாத பொங்கல் விழா பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, இருளப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்குள் வந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
பின்னர், பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு சமர்ப்பித்து வழிபாடுகள் நடத்தினர். இதையடுத்து, ஆடு மற்றும் கோழி பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.
மரப்பறை, வெண்ணந்தூர், தாரமங்கலம், சேலம், ராசிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து இருளப்பசாமி தரிசனம் செய்தனர். விழா சிறப்பாக நடைபெற, விழாக்குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.