வசந்தபுரத்தில் வீட்டுமனை பட்டா திட்டம் – கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அருகே, வசந்தபுரத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை, கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்;

Update: 2025-04-21 06:20 GMT

வசந்தபுரத்தில் வீட்டுமனை பட்டா திட்டம் – கலெக்டர் உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு, அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரம் பகுதியில் வீடுகளுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது குடியிருப்புவாசிகளிடம் நீண்ட கால வசிப்பை நிரூபிக்கும் வீட்டு வரி ரசீது, மின் கட்டண ரசீது மற்றும் வருமானம் சார்ந்த ஆவணங்களை கேட்டறிந்து சரிபார்த்தார். ஆய்வின்போது கலெக்டர் உமா கூறியதாவது, ஆவணங்கள் சரியாக இருந்தால், அரசின் விதிமுறைகளின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வரன்முறைபடுத்தப்பட்டு, விரைவில் பட்டா வழங்கப்படும், என்றார்.

இந்த நடவடிக்கைகள், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News