JEE தேர்வில் 35 மாணவர்கள் அசத்தல் வெற்றி
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை;
ஜே.இ.இ.யில் 35 மாணவர்கள் அசத்தல் வெற்றி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளி, ஜே.இ.இ. (JEE) நுழைவு தேர்வில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து மொத்தம் 35 மாணவர்கள் JEE அட்வான்ஸ் தேர்விற்குத் தகுதி பெற்றுள்ளனர், இது பள்ளியின் கல்வித் தரத்தையும், மாணவர்களின் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது. இதில் குறிப்பாக, பிளஸ் 2 மாணவரான மைலானந்தன், JEE தேர்வில் 99.93 சதவீத மதிப்பெண்களைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பெற்ற அகில இந்திய தரவரிசையான 208வது இடம், அவரது முயற்சி, ஒழுங்குமுறை, மற்றும் பள்ளியின் கல்வி தரத்துக்கான சான்றாகும். மைலானந்தன் தனது வெற்றிக்கான காரணங்களைப் பற்றி பேசும் போது, தினமும் திட்டமிட்டு படிப்பதற்கான பழக்கம் எனக்கு மிகுந்த பயனளித்தது. பள்ளியில் வழக்கமாக நடத்தப்பட்ட பயிற்சி தேர்வுகள், நேர்முகச் சொற்பொழிவுகள் மற்றும் ஆசிரியர்கள் எப்போதும் வழங்கப்பட்ட ஆதரவும் வழிகாட்டலும் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் அளித்தது, என கூறினார். இச்சாதனை, நாமக்கல் பள்ளிகளின் கல்விச்சாதனைகள் தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில் இருப்பதையும், மாணவர்கள் தேசிய போட்டிகளில் முன்னிலைப் பெற முடியும் என்பதை நிரூபிக்கிறது.