சுயதொழில் ஆரம்பிக்க அரசு உதவித் திட்டங்கள் தயார்

பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவியர்களுக்காக கல்லூரி கனவு – 2025 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது;

Update: 2025-05-21 06:40 GMT

சுயதொழில் ஆரம்பிக்க அரசு உதவித் திட்டங்கள் தயார்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவியர்களுக்காக 'கல்லூரி கனவு – 2025' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். நிகழ்வில் பேசும் போது, கலெக்டர் உமா, “உயர்கல்வியைத் தொடர்ந்து அரசு வேலைக்கு காத்திருக்காமல், அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி தொழில் முனைவோராக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்,” என அறிவுறுத்தினார். மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை திட்டத்தை இரு வகையாக பிரிக்கலாம் என்று அவர் கூறினார் – நினைத்ததை படிப்பது மற்றும் கிடைத்ததை படிப்பது.

டாக்டராக வேண்டும் என நினைத்து ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்தாலும் மனம் தளராமல், பாராமெடிக்கல், நர்சிங், பிசியோதெரபி போன்ற படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற தொழில்நுட்பக் கல்வி வழிகளில் சென்று வெற்றி பெறலாம் என்றார். மேலும், சுயதொழில் தொடங்குவதன் மூலம் ஒருவர் மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்றார்.

இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, உதவி இயக்குநர் பார்த்தீபன், சமூக நல அலுவலர் காயத்திரி, முன்னோடி வங்கி மேலாளர் முருகன் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News