கொக்கராயன்பேட்டையில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் தீவிரம்
கொக்கராயன்பேட்டை நான்கு சாலை சந்திப்பில், தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெகு உற்சாகமாக நடைபெற்றது;
கொக்கராயன்பேட்டையில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் தீவிரம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகேயுள்ள கொக்கராயன்பேட்டை நான்கு சாலை சந்திப்பில், தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று வெகு உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் இளங்கோவன் தலைமையிலான நிகழ்வில், முக்கிய பேச்சாளராக கோவிந்தன் பேசினார். அவர் தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு வருட சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட நல திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜான்சன், ஆறுமுகம், சந்திரசேகர், மாவட்ட விவசாயர் துணை அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, மக்களை சந்தித்து, அதிமுக ஆட்சியின் குறைகளை விளக்கும் பணியிலும் ஈடுபட்டனர். பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கூட்டத்தை கேட்டு, எதிர்வரும் தேர்தலுக்கான அணிவகுப்பை உருவாக்கும் நிலைமை தென்பட்டது.