எலச்சிபாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

எலச்சிபாளையத்தில், 39 மையங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் ஒருநாள் சிறப்பு பயிற்சி நேற்று நடைப்பெற்றது;

Update: 2025-05-14 04:10 GMT

எலச்சிபாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் – தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டார வள மையத்தின் கீழ் செயல்படும் 39 மையங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கான, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ஒருநாள் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் துவக்கிவைத்தார்.

பயிற்சியில், "முழு எழுத்தறிவு பெற்ற வட்டாரமாக எலச்சிபாளையத்தை மாற்ற என்னென்ன நடவடிக்கைகள் தேவை?", "எப்படி முழுமையான கணக்கெடுப்பு செய்யலாம்?", மற்றும் "எழுத்தறிவின் சமூக முக்கியத்துவம் என்ன?" என்பதுபோன்ற தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், கல்வியறிய விரும்பும் மக்களுக்கு தன்னார்வலர்கள் எவ்வாறு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், எழுத்தறிவை விரிவாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 

Tags:    

Similar News