12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – நாமக்கல் மீண்டும் சாதனை

தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்;

Update: 2025-05-08 04:20 GMT

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – நாமக்கல் மீண்டும் சாதனை

தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 7,60,606 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதையடுத்து, மாநில அளவில் தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு காட்டிலும் சிறப்பான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், கல்வித் துறையில் தொடர்ந்து முன்னணியில் திகழும் நாமக்கல் மாவட்டம் இந்த ஆண்டும் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 17,260 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், அதில் 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.10% என உயர்ந்துள்ளது.

தேர்ச்சியில் மாணவிகள் மீண்டும் மாணவர்களைவிட அதிக முன்னேற்றம் காட்டியுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.17% என பதிவாகியுள்ளதுடன், மாணவர்கள் 94.96% தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர். மாணவிகள் கல்வியில் தொடர்ந்து தங்களது சிறப்பை நிரூபித்து வருகின்றனர் என்பது இங்கு தெளிவாகின்றது.

துறை வாரியாக:

தனியார் பள்ளிகள்: 96.70%

அரசு உதவிப் பள்ளிகள்: 95.49%

அரசு பள்ளிகள்: 91.32% .

மாவட்ட வாரியாக:

முதலிடம்: திருப்பூர் – 97.45%

இரண்டாம் இடம்: ஈரோடு & சிவகங்கை – 97.42%

மூன்றாம் இடம்: அரியலூர் – 97.25%

கடைசியில்: திருவண்ணாமலை – 90.47% .

நாமக்கல் மாவட்டம்: 96.10% .

மாணவர்கள் முடிவுகளை கீழ்காணும் இணையதளங்களில் வாயில் எண் மற்றும் பிறந்தநாள்தேதி உள்ளிட்ட விவரங்களைப் பயன்படுத்திக் காணலாம்:

www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in, www.tnresults.nic.in.

Tags:    

Similar News