கிராம கோவிலில் 210 குடும்பங்கள் தனிப்பட்ட விழா நடத்த கோரி மனு
ராசிபுரம் அருகே கிராம கோவில்களில் தனிப்பட்ட பூஜை நடத்த அனுமதி கோரிய 210 குடும்பங்கள்! மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்;
210 குடும்பத்தினர் தனியாக பூஜை விழா நடத்த அனுமதி கோரி மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 210 குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் தனியாக பூஜை மற்றும் திருவிழா நடத்துவதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது எங்கள் கிராமத்தில் 2023ஆம் ஆண்டில் 65 லட்சம் ரூபாய் செலவில் மாரியம்மன், விநாயகர், கடகடப்பன் மற்றும் மதுரைவீரன் ஆகிய கோவில்களை புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினோம். இந்த கோவில்களில் தினசரி பூஜைகள் மற்றும் ஆண்டு திருவிழாக்கள் நடத்துவதற்கு கிராமத்தில் உள்ள சில தனிநபர்கள் தடை ஏற்படுத்தி வருகின்றனர்
எங்கள் குடும்பங்கள் இந்த கோவில்களை கட்டுவதற்காக பெரும் தொகையை செலவு செய்துள்ளோம். எனவே, எங்கள் 210 குடும்பத்தினருக்கு இந்தக் கோவில்களில் தனியாக பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரைவில் ஆய்வு மேற்கொண்டு முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கிராம மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, ஏனெனில் பல்வேறு தெய்வங்களுக்கான பூஜை விழாக்கள் அந்தப் பகுதியின் கலாச்சார அடையாளமாக திகழ்வதோடு, மக்களின் நம்பிக்கையுடனும் தொடர்புடையதாக உள்ளது.