ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்;

Update: 2021-03-21 07:01 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, திருவேங்கட சாலையில் பறக்கும் படை அதிகாரி சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1,12,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு வந்தவர் குறிஞ்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யபட்ட பணத்தை சங்கரன்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News